ஜிமெயிலை ‘சைன் அவுட்’ செய்ய மறந்துவிட்டால்..

உங்கள் ஜிமெயில் மின்னஞ்சலில் தனிப்பட்ட தகவல்கள், அலுவலகம் தொடர்பான மின்னஞ்சல் போன்றவை இருக்கக்கூடும்.

இந்நிலையில், நீங்கள் சிலநேரம் உங்கள் மின்னஞ்சலைப் பார்த்துவிடடு அதை ‘சைன் அவுட்’ செய்ய மறந்திருக்கலாம்.

அந்த மாதிரியான நேரத்தில் எங்கே நமது சொந்த விஷயங்களை மற்றவர்கள் படித்துவிடுவார்களோ என்ற அச்சம் கொள்ள வேண்டாம்.

மேலும், எந்தக் கணினியில் அமர்ந்து உங்கள் மின்னஞ்சலைப் பார்த்தீர்களோ அந்தக் கணினியிலேயே ‘சைன் அவுட்’ செய்ய வேண்டிய அவசியமில்லை.

மாறாக வேறு கணினியிலேயே, குறிப்பிட்ட ஜிமெயில் கணக்குக்குள் உள்நுழைந்தவுடன், அதன் கீழ்ப்பகுதியில்   Last account activity   என்பதுடன்    Details    என்ற இணைப்பு இருப்பதைக் கவனியுங்கள்.

அந்த ‘டீட்டெய்ல்ஸ்’-ஐ கிளிக் செய்தால், திறக்கும் பாக்சுக்குள், நீங்கள் எந்தெந்த சாதனம் மூலம் உள்நுழைந்துள்ளீர்கள், எவ்வளவு நேரத்துக்கு முன் உள்நுழைந்தீர்கள் என்று காட்டப்படும்.

அதன் பின்னர்,   Sign Out all other session    என்பதனை கிளிக் செய்வதன் மூலம், ‘சைன் அவுட்’ செய்ய மறந்த சாதனங்களில் இருந்து நீங்கள் வெளியேறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!